The Kids World logo

Subscribe for latest videos

January 2, 2024 by kids

-சிலந்தி மீன்-

சிலந்தி மீன்கள் உருண்ட உடலமைப்பில் பெரிய கண்கள் மற்றும் எட்டு கைகளுடன் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவை. உலகின் அனைத்து வெதுவெதுப்பான மற்றும் வெப்பமண்டல ஆழகடல் பகுதிகளில் இவைகள் காணப்படுகின்றன. இதற்கு நீராளி என்ற பெயரும் உண்டு.
சிலந்தி மீன்கள் இருக்கும் இடத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தங்கள் உருவத்தை மறைத்துக் கொள்வதில் திறமை வாய்ந்தவை எதிரிகள் தாக்க வந்தால் இவை மை போன்ற திரவத்தை தூவி இருளச் செய்து, எதிரிகளிடமிருந்து தப்பித்து விடும்.
சிலந்தி மீன்கள் எலும்புகள் இல்லாத மென்மையான உடலமைப்பை கொண்டவை அதனால் இவைகளால் தங்கள் உடலை சுருக்கிக் கொள்ளவும் விரித்துக் கொள்ளவும் முடியும். சிறிய துவாரங்களில் கூட இவைகளால் நுழைந்து செல்ல முடியும்,
சிலந்தி மீன்கள் கைகளை இழந்து விட்டால் மீண்டும் வளர்ந்து விடும். ஏதாவது காயம் ஏற்பட்டோ அல்லது சண்டையிலோ கைகள் துண்டாகி விட்டால் நாளடைவில் அவை மீண்டும் வளர்ந்து விடும் தன்மை கொண்டவை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *